Loading...
Tuesday, 3 May 2016

... தீபா ...


பெங்களூர் கண்டோண்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன். காலை 5.00 மணி. அவசர அவசரமாக ஓடினேன் ஸ்டேஷனுக்குள். சென்னையிலிருந்து அப்போதுதான் காவேரி எக்ஸ்பிரஸ் வந்திருந்தது. என் நண்பன் சிவா அதில்தான் வருகிறான். வேகமாக உள்ளே செல்கையில் தெரியாமல் ஒரு பெண் மீது மோதிவிட, ரொம்பவே கோபப்பட்டாள் அவள்.

"Sorry..."

"Why do you run like this... You don't have brains?"

"Well, I said Sorry..."

"Saying sorry does not absolve everything..."

அவசரத்தில் இவள் வேறு படுத்துகிறாளே என்று நினைத்துக்கொண்டு,

"சர்தான் போடீ..." என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். அதில் அவளுக்கு இன்னும் பயங்கர கோபம் வந்துவிட்டது.

"நீ போடா...." என்றாள். பாதி தூக்கத்தில் இருந்த அவளைப்பார்த்து இப்போது எனக்கு பயங்கர சிரிப்புதான் வந்தது. சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டேன். நல்ல ஃபிகர் என்று நினைத்துக்கொண்டேன்.

"This is atrocious..." என்று ஏதோ சொல்லிக்கொண்டே அவளும் சென்று விட்டாள்.

சிவாவைத்தேடி பிளாட்ஃபாரத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன். அவன் ஃபோஐயும் எடுக்கவில்லை. ட்ரெயின் கிளம்பிவிட்டது. ஆனால் அவனை காணவில்லை. பையன் தூங்கிவிட்டிருக்கவேண்டும். மெஜஸ்டிக் போய் ஃபோனில் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அப்போது என்னுடன் சண்டை போட்ட அந்தப்பெண்ணைச்சுற்றி நான்கைந்து ஆட்டோக்காரர்கள் நின்றிருந்தார்கள். அவள் முகம் வெளிறியிருந்தது. ஏதோ சத்தமாக கத்திக்கொண்டிருந்தாள். ஸ்டேஷன் வாசலில் நிற்க வேண்டிய போலீஸ்காரரோ தூரத்தில் ஆட்டோக்களை ப்ரீ-பெய்ட் கௌண்ட்டருக்கு விரட்டிக்கொண்டிருந்தார். அவர்கள் அருகே சென்றேன்.

"என்ன குரோ? பிரச்சனையா?" என்றேன் ஒரு ஆட்டோக்காரரிடம்.

"இல்லப்பா... ரொம்ப பேசுது இந்த பொண்ணு..."

"இன்னாம்மா... தமிளா?" என்றேன் அவளிடம்.

"Hey.. You don't interfere.. Okay..." என்ற அவள் முகத்தில் பயக்களை மொத்தமாக வடிந்ததைப்பார்க்க முடிந்தது.

"Come to the police..." என்றேன் நான்.

ஆட்டோக்காரர்கள் இப்போது பின் வாங்கினார்கள்.

"பிடி குரோ..." என்று நகர்ந்தனர் மற்ற கஸ்டமர்களை நோக்கி.

"அது தான் ப்ரீ பெய்ட் கௌண்டர்... Go there... அங்கே போய் சண்டை போடாதீங்க..." என்றேன் அவளிடம்.

"Thanks..."

"You are welcome... இதோ என் கார்ட்... ஏதாவது பிரச்சனைன்னா கால் பண்ணுங்க...." என்றேன்.

"You are not my savior.. Okay? I know to save myself...".

தோளைக்குலுக்கிக்கொண்டே என் ஐக்கானை நோக்கி நடந்தேன்.

"Just a minute..." என்றவள் என்னிடமிருந்து கார்டை வாங்கிக்கொண்டாள்.

சிரித்துக்கொண்டேன்.

வண்டியை எடுக்கும் முன் சிவா கால் செய்து விட்டான். வண்டியை மெஜஸ்டிக் நோக்கி விட்டேன்.

விதான சௌதா அருகே செல்லும் போது இன்னொரு கால். ஏதோ புது நம்பர். வெளியூர் நம்பர்

"ஹலோ..."

"ஹலோ... நான்.. நான் தீபா பேசறேன்... "

யாரென்று குரலிலிருந்தே நன்றாக தெரிந்தது. இருந்தாலும்.

"தீபா... யாரு... தெரியலயே..."

"இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்டேஷன் ல பாத்தீங்களே... ஆட்டோக்காரங்க கூட..."

"ஓ.. ஓ.. ரைட்... சொல்லுங்க... Any problem?"

"ஆமா.... ப்ரீ-பெய்ட் கௌண்ட்டருக்கு போறதுக்கு முன்னாடியே ஒரு ஆள் வந்து மீட்டர் சார்ஜ் குடுத்தா போதும்னு சொன்னான்... சரின்னு ஏறிட்டேன்... "

"ஓ...."

"அப்புறம் கொஞ்ச தூரத்துலயே 50 ரூபா காட்டிச்சு மீட்டர்... அவன் கிட்ட கேட்டா சண்டை போட்டுட்டு இங்கேயே இறக்கி விட்டுட்டு போயிட்டான்..."

"இங்கியேன்னா...? ஸ்டேஷன்லயா?"

"இல்ல... இது... என்ன இடம்னு தெரியலயே.... Traffic Signal இருக்கு...."

"ஐயோ.. அது ஊரெல்லாம் இருக்கும்மா... வேற ஏதாவது பாரு... ங்க..."

"Reliance advertisement hoarding இருக்கு..."

"ஆஹா... அற்புதமான landmarks சொல்றீங்க.... Just a min... அங்கே FUNSKOOL கடை இருக்கா சிக்னல் கிட்ட...."

"ஒரு நிமிஷம்... ஆமா... இருக்கு...."

"குட்... அதுக்கு வெள்ளாரா ஜங்க்ஷன்னு பேரு... "

"ஓ..."

"ஓ ன்னா? உங்களுக்கு எங்கே போகனும்? Friends/Relatives யாரும் கிடையாதா?"

"Friend வீட்டுக்கு தான் போகணும்... கோரமங்களால... அவ ஃபோன் எடுக்க மாட்டேங்குது... அதான்... உங்களுக்கு பண்ணேன்..."

"ஹ்ம்... சரி, வெய்ட் பண்ணுங்க அங்கேயே... நான் ஒரு 10 நிமிஷத்துல வர்றேன் அங்க...."

இப்போது சிவா என்ன ஆவான் என்ற உங்கள் கவலை எனக்கு புரிகிறது. "ஃபிகர பாத்து ஃப்ரெண்ட கட் பண்றது" தானே தமிழ் பண்பாடு. நான் மட்டும் அதை எப்படி மீற முடியும்? அதாகப்பட்டது என் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், சிவா பஸ் பிடித்து என் வீட்டுக்கு சென்று விடுவான். அவனால் எனக்கு எவ்வளவு சிரமம் என்று ரொம்ப வருத்தமும் படுவான்.

வெள்ளாரா ஜங்க்ஷன் சென்று பரஸ்பர பெயர் அறிமுகங்கள் முடிந்து அவளை அழைத்துக்கொண்டு கோரமங்களா செல்கையில்...

"If you don't mind... எதுக்கு பாங்களூர் வந்திருக்கீங்கன்னு தெரிஞ்ச்சிக்கலாமா?"

"Yeah sure.. நான் ஒரு இண்டீரியர் டிசைனர்... இப்போதான் பிஸினஸ் செட் அப் பண்ணியிருக்கேன்.... இங்கே ஒரு சாஃப்ட்வார் கம்பனில ஒரு டெமோ குடுக்கணும்... அதுக்குத்தான்... இந்த பிராஜெக்ட் கிடைச்சிட்டா அப்புறம் அட் லீஸ்ட் ஒரு வருஷம் பாங்களூர் வாசம் தான்"

"Oh Great... All the best for the demo.... க்ரியேடிவான ஆள் போலயிருக்கு நீங்க..."

"Thanks a lot... By the way, you can say நீ.. நீங்க வேண்டாம்..."

"ஹ்ம்... ஓகே... ஆனா எனக்கு மரியாதை வேணும்பா...."

"கண்டிப்பா... " என்று சிரித்தாள்.

"Well தீபா... நீங்க... I mean நீ, இஞ்சினீயரிங் மெடிஸின் எல்லாம் ட்ரை பண்னாம எப்டி எஸ்கேப் ஆன? You seem to have chased your dreams..."

"இல்ல... நானும் இஞ்சினீயரிங் பண்ணேன்... பாதில, I had to discontinue... ப்ளீஸ்... Don't ask me why..."

கிட்டத்தட்ட அழுதுவிடுவாள் போலிருந்தது.

"Hey Hey.. Sorry... நான் கேட்க மாட்டேன்...."

அப்புறம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.

அவளை அவளது நண்பியின் வீட்டில் ட்ராப் செய்துவிட்டு ஒரு அருமையான காஃபி குடித்துவிட்டு நான் வட நாட்டில் படித்த கதைகள், வெளிநாட்டில் வேலை பார்த்த கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன்.

"ரமேஷ்...." என்றாள் தீபா.

"சொல்லு தீபா..."

"காலைல கொஞ்சம் Harsh ஆ பேசிட்டேன்... Don't keep it in mind..."

"ஓ.. I loved it absolutely..." என்று சிரித்தேன்.

எவ்வளவோ பெண்களுடன் பழகியிருந்தாலும் முதல் நாளே இவ்வளவு க்ளோசாக யாருடனும் ஆனதில்லை. "This is something special" என்று பட்சி சொன்னது.

வீட்டுக்கு வந்தவுடன்

"ரொம்ப சாரிடா..." என்றான் சிவா, கண்டோண்மெண்டில் தூங்கிவிட்டதற்காக.

"தேங்க்ஸ் டா" என்ற என்னை ரொம்ப வித்தியாசமாக பார்த்தான் அவன்.

நீங்கள் எதிர்பார்த்தது போலவே அதன் பின் இதெல்லாம் நடந்தது.

(1) அந்த பிராஜெக்ட் அவளுக்கு கிடைத்து அவள் பாங்களூர் வாசியானாள்.
(2) Weekdays-இல் இருவரும் மணிக்கணக்காக ஃபோனில் பேசிக்கொண்டோம்
(3) Weekends முழுதும் ஒன்றாக செலவழித்தோம்.

இதையெல்லாம் எதிர்பார்த்த நீங்கள், நாங்கள் இருவரும் காதலிக்கத்துவங்கினோம் என்று எதிர்பார்க்க மாட்டீர்களா. அதுவும் செய்தோம். இருவரின் வீட்டிலும் ஓகே சொல்லிவிட, எந்த பிரச்சனையுன் இல்லாமல் "Life is Beautiful" என்று சந்தோஷமாக இருந்தோம். அவள் இஞ்சினீயரிங் பாதியில் விட்டு விட்ட காரணம் மட்டும் முழுதுமாக விளங்கவில்லை. ரொம்ப ராகிங் இருந்ததால் என்று மட்டும் அவள் தோழிகள் மற்றும் பெற்றோர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி பேசினாலே அவள் அப்செட் ஆகிவிடுவாள் என்பதால் நான் எதுவும் கேட்பதில்லை.

எங்கள் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில், ஒரு நாள் இருவரும் சினிமா பார்த்துவிட்டு, எம் ஜீ யில் உல்லாஸில் சாப்பிட உட்கார்ந்தோம். இருவரும் மிகவும் ஜாலி மூடில் இருந்தோம். அப்போது

"தீபா..."

"ம்...."

"என் ஃப்ரெண்ட் ஆண்டனி தெரியுமா?"

"சொல்லியிருக்கீங்க...."

"அவன் ஒரு கேள்வி கேட்டிருக்கான் அவனோட கேர்ள்-ஃப்ரெண்ட் கிட்ட..."

"என்னது...?"

"நீ ஒரு விர்ஜினா... அப்டின்னு... " என்று சொல்லி பயங்கரமாக சிரித்தேன். ஆனால் அவள் முகத்தில் சலனமில்லை.

"எவ்ளோ பெரிய லூசு பாரு தீபா அவன்... Even if she has slept with someone else, சொல்லவா போறா அவ? எந்த பொண்ணு தான் சொல்லுவா..."

இந்தப்பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என்பது முகத்திலேயே தெரிந்தது. இருந்தும் அவளை சீண்டினேன்.

"இப்போ உன்னையே நான் கேட்டாகூட, சொல்லவா போற நீ?" என்று சொல்லி கடகட வென நான் சிரிக்க, அவள் அழுதுகொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

"ஹேய்... ஹேய்... தீபா... நில்லு... கமான்... that was a joke... இதெல்லாம் ஓவர்மா.... "

அதற்குள் அவள் சென்றிருந்தாள். பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு நான் கீழே வரும் முன் அவள் ஆட்டோ ஏறி போயிருந்தாள்.

அப்படி என்ன தப்பாக பேசிவிட்ட்டோம் என்று அவள் மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு சென்று பார்த்து விடுவோம் என்று அங்கே சென்றேன்.

அவள் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டிருந்தாள். என்னவென்று புரியாமல் அவள் தோழி வெளியே நின்றிருந்தாள். நான் விஷயத்தை சொன்னவுடன்

"என்ன காரியம் பண்ணிட்டீங்க ரமேஷ்" என்றாள்.

"Hey that was a joke..."

"ஹ்ம்... I understand.. In fact, எங்க தப்பு இது.. நாங்க முன்னடியே உங்க கிட்ட சொல்லியிருக்கணும்...."

"என்னது?"

"சொல்றேன்... இப்டி உக்காருங்க... "

உட்கார்ந்தேன்.

"இவ்ளோ நாளா அவ இஞ்சினீயரிங் ஏன் பாதில விட்டான்னு கேட்டா ராகிங்னு சொன்னோமே..."

"ஆமா..."

"அது ராகிங் இல்ல..." என்று ஆரம்பித்து அவள் கீழே விவரிக்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை சொல்ல ஆரம்பித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்தை முள்ளாக தைத்தன.

ராஜஸ்தானிலுள்ள புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரி, வருடா வருடம் மூன்று நாட்கள் பேப்பர் பிரசெண்டேஷன் போட்டி நடத்துவது வழக்கம். சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் படித்த தீபா, முதல் வருடத்திலேயே அனைத்து பேராசிரியிரர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருந்ததால், ராஜஸ்தான் கல்லூரியின் போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் நாள் நடந்த, பல கல்லூரிகள் பங்கு பெற்ற போட்டியில் அவளுக்கு முதலிடமும் கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் தீபா.

போட்டியின் கடைசி நாள். மதியம் மூன்று மணிக்கு மேல் போட்டிகள் முடிந்து பார்ட்டி டைம் ஆரம்பம் ஆனது. "நீங்க என்ஜாய் பண்ணுங்க" என்று அவர்கள் ஆசிரியை கிளம்பிவிட, தீபாவுக்கும் அவள் கல்லூரித்தோழிக்கும் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் புதிதாக இருந்தன. கல்லூரிக்குள்ளேயே அனைவரும் பியர் குடித்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சும்மா வேடிக்கைப்பார்த்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு டான்ஸ் டைம் ஆரம்பமாக, அந்தக்கூட்டத்திலேயே மிக அழகாக இருந்ததால், தீபாவுடன் டான்ஸ் ஆட பல மாணவர்கள் ஆசை தெரிவித்தார்கள். அவர்களுக்கு "No" சொல்வதே பெரிய வேலையாக இருந்தது. எப்போது கிளம்புவோமென்றிருந்தது அவளுக்கு. டெல்லி செல்லும் அவர்களுடைய பஸ் அடுத்த நாள் காலைதான் கிளம்பும்.

அப்போது அவளருகே வந்த ஒருவன்

"என்ன தமிழ்நாடா" என்றான். குடித்திருந்தான்.

"ஆமாம் சார்..."

"குட்... வா... நானும் தமிழ் தான்... என் கூட ஆடு...."

"இல்ல சார்... வேணாம்... எனக்கு ஆடத்தெரியாது...."

"ஹே... கமான் டார்லிங்... நான் சொல்லித்தறேன் வா...." என்று அவள் இடுப்பைப்பற்றி இழுத்தான்.

சட்டென்று ஒரு ரிஃப்லெக்ஸில் அவனை பளேர் என்று அறைந்தாள். சட்டென்று அவளை விட்டு விட்டு அவன் ஓடி மறைந்தான். அதற்கு மேல் அங்கு இருக்கப்பிடிக்காமல், அவள் தன் தோழியுடன் தன் அறைக்கு சென்று விட்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு அவளும் அவள் தோழியும் வீட்டுக்கு ஃபோன் செய்து விட்டு இருட்டான அந்த சாலையில் அறை நோக்கி திரும்புகையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.

"டேய் மச்சான்... நம்ம கணேஷ அடிச்ச பத்தினி இதோ வருது பாரு...."

"என்னாடா சொல்ற? கணேஷ் அடி வாங்கினானா?"

"தெரியாதா? மச்சி.. கணேஷ்... சொல்லலியா.... ஹா ஹா ஹா.... " என்று அனைவரும் சிரித்தார்கள். அனைவரும் குடித்திருந்தார்கள் என்பது பேச்சிலேயே தெரிந்தது.

சற்று தூரத்திலேயே நின்று கொண்டார்கள் தீபாவும் அவள் தோழியும்.

"இப்போ பாருங்கடா...." என்ற கணேஷ், அவளை நோக்கி கத்தினான்... "ஏய்... பத்தினி... இங்க வாடி... இப்போ அடி பாக்கலாம்...."

அவர்கள் அனைவரும் மீண்டும் ஃபோன் கடைக்கே ஓட எத்தனிக்க, தீபாவை மட்டும் வந்து இறுக்கப்பிடித்துக்கொண்டான் அந்த கணேஷ். சற்று நேரம் போராடிப்பார்த்த அவள் தோழி யாரைவாவது கூப்பிடலாம் என்று கடைக்கே ஓடி விட்டாள்.

"டேய் மச்சான்... Are you crazy... விட்றா அவள..."

"போடா பாடு... அலிப்பயலே... நீயெல்லாம் பேசத்தான் லாயக்கு...."

"ஆமா மச்சி... நீ போடா அலிப்பயலே ... கணேஷ் ராஸா... என்ன பண்ணலாம் இப்போ..."

"டேய்... இவளுக்கு நல்ல பாடம் சொல்லிக்குடுக்கணும் டா..."

ஒருவன் அவளைப்பிடித்துக்கொள்ள, மற்றவன் அவன் ஆடைகளை உருவினான். மூன்றாமவன் அவளது ப்ரைவேட் அங்கங்களை தன் கைகளாலும் வாயாலும் தொட்டு "இப்போ அடி டீ..." என்று கத்தினான்.

அவள் போட்ட கூச்சல்களை கேட்க யாருமேயில்லை அங்கே.

அப்போது ஃபோன் பூத்திலிருந்து வெறு இருவரை கூட்டிக்கொண்டு அவள் தோழி வந்து விட, அவர்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் தீபா. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்று வந்தவர்கள் கேட்க, "ஒன்றுமில்லை, மிரட்டிவிட்டு போய்விட்டார்கள்" என்றாள். அவள் தன் தோழியையும் அதற்குமேல் பேச விட வில்லை.

ரூமுக்கு சென்ற பின்னும் இவள் பிரமை பிடித்தது போல் இருக்க,

"போய் கம்ப்ளெய்ண்ட் குடுக்கலாம் டீ..." என்றாள் அவள் தோழி.

"வேணாம்.. நாளைக்கு ஊர் போற வழிய பாக்கலாம்..." என்று சொல்லி படுத்துக்கொண்டாள்.

திடீரென்று அவள் வாந்தி எடுப்பதைப்பார்த்த அவள் தோழி எழுந்திருந்தாள். அப்போது அவள் அங்கிருந்த "HIT" ஐ குடித்திருந்தது தெரிய வந்தது. உடனே அவள் தன் கல்லூரி ஆசிரியை அழைத்து விஷயத்தைச்சொன்னாள். உடனடியாக டாக்டரிடம் சென்றார்கள். "தெரியாமல்" குடித்துவிட்டதாக அந்த ஆசிரியை டாக்டரிடம் சொன்னாள். தீபாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படி செய்ததாக பின்னர் சொன்னாள். நல்ல வேளையாக விஷம் வேலை செய்யும் முன்பே வெளியே எடுக்கப்பட்டது.

சென்னை வந்த பின்னும் தீபாவிற்கு பிரமை அடங்கவில்லை. கல்லூரியிலிருந்து நின்றாள். தொடர்ந்து ஆறு மாதங்கள் "சைக்யாட்ரிஸ்ட்"களிடம் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின் ஒரு இண்டீரியர் டெகரேஷன் கோர்ஸ் படித்து விட்டு இப்போது பிஸினெஸ்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போது நான் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தேன். கதவை திறந்து கொண்டு தீபா வெளியே வந்தாள்.

"நான் முன்னாடியே சொன்னேன் ரமேஷ்... உங்க கிட்ட சொல்லடலாம் இதைப்பத்தின்னு...." என்றாள் அவள் தோழி.

"...."

"இவ தான் அந்த விஷயத்த இன்னும் சீரியஸா நினைச்சிக்கிட்டு இருக்கா... என்ன ரேப்பா பண்ணிட்டாங்க... It was just a case of eve teasing... "

"...."

என் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள் தீபா.

"அத சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு பயம் இவளுக்கு... சொல்லுங்க ரமேஷ்... Would you take it so seriously?"

"...."

"ரமேஷ்... உங்களத்தான் கேக்கறேன்..."

"ம்... தெரியல... அது.... வந்து... நான்...."

என்னை நிமிர்ந்து பார்த்தாள் தீபா. "ரமேஷ்...." என்றாள்.

அவளிடமிருந்து என்னை மெதுவாக விடுவித்துக்கொண்ட நான்,

"இப்போ பேசற மூட்ல நான் இல்ல தீபா.... காலைல பேசுவோமே..." என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

இரவு நெடு நேரம் உறக்கமேயில்லை. ஆண்டனியும் தீபாவின் முகமும் அந்த நிகழ்ச்சியும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக காலையில் தீபாவுடன் பேசிக்கொள்ளலாம் என்று தூங்கிப்போனேன்.

காலையில் முதல் வேலையாக தீபாவுக்கு ஃபோன் செய்தேன். ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவேயில்லை. அப்போதுதான் தோன்றியது, என் நேற்றைய நடவடிக்கை தீபாவை எப்படி பாதித்திருக்கும் என்று. "The Unthinkable" நடந்துவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டே அவள் வீட்டுக்குச்சென்றேன்.

ஆனால், "Unthinkable" ஏற்கனவே நடந்திருந்தது.

வீட்டுக்கு வெளியே ஆம்புலண்ஸ். அதில் அவளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

"அவளுக்கு என்ன ஆச்சு..."

என்னை முறைத்துப்பார்த்த அவள் தோழி,

"இனிமே அவ இல்ல... 'அது' தான்... போஸ்ட் மார்ட்டெம்கு போகுது... சாகடிச்சுட்டியே டா.. இந்தா உனக்கு லெட்டர்.... ." என்று சொல்லி என் மேல் ஒரு லெட்டரை வீசி எறிந்தாள்.

"ரமேஷ்.... நான் முன்னாடியே செத்திருக்கணும்.... உங்க மேல ஒரு தப்பும் இல்ல... என் சாவுக்கு நீங்க காரணம் இல்ல... வேணா அந்த நாலு பேற சொல்லலாம்..."

ஆம்புலண்ஸ் கிளம்பியிருந்தது.

"ஐயோ... தீபா... உன் சாவுக்கு எப்படியும் நான் காரணம் தீபா... அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன் தீபா... அதச்சொல்லத்தானே வந்தேன்... ஐயோ... என்ன மன்னிப்பியா தீபா..."

என்று கத்திக்கொண்டே அதன் பின்னே ஓடினேன்.

0 comments:

Post a comment

 
TOP