Loading...
Sunday 21 July 2013

கவனச்சிதறல் தோல்வியைத் தரும்(குட்டிக்கதை)

 ஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல் இருந்தது. ஜென் மாஸ்டர் அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறினார். அது, "ஒரு முறை ஓர் சிறந்த ஓவியன் அவருடைய திறமையை முன்வைத்து ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக தோழனிடம் "எப்படி இருக்கிறது" என்று கேட்டார்.



தோழனும் "இது நன்றாக இல்லை" என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், "நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!" என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை வரைந்தார்.

தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியத்துடன் "படு சூப்பர்" என்று சொல்லி, அவரை பாராட்டினான். ஆகவே "எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்வதால் வெற்றி நிச்சயம். அதைவிட்டு அவ்த செயலை பிறர் பார்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால், அது ஒரு முழுமையை தராது" என்று ஜென் மாஸ்டர் அந்த சீடனுக்கு இந்த கதையின் மூலம் உணர்த்தினார்.

0 comments:

Post a Comment

 
TOP