Loading...
Wednesday 6 July 2016

உலகத்தை வெல்பவர் யார்?


உலகத்தை வெல்பவர் யார்?
ஆதிசங்கரரிடம் சீடர்கள் சிலர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் தொலைநோக்கு சிந்தனையில் அளித்துள்ள பதிலும் எல்லா காலத்திலும் மனிதர்களுக்கு பொருந்தும் என்பதில் மாற்று கருத்தில்லை.

எது இதமானது?

தர்மம்

எது நஞ்சு?

பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.

எதிரி யார்?

சோம்பல்

எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு

குருடனைவிடக் குருடன் யார்?

ஆசையுள்ளவன்

சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல் அதை அடக்குபவன்

மதிப்புடன் வாழ என்ன செய்வது?

யாரிடமும் எதையும் கேட்காமல் இருப்பது.

எது துக்கம்?

மனநிறைவு இல்லாமல் இருப்பது

உயர்ந்த வாழ்வு எது?

தவறு செய்யாமல் இருப்பது.

நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள்.

எது இன்பம் தரும்?

நல்லவர்களின் நட்பு.

விலை மதிப்பற்றது எது?

காலம் அறிந்து செய்யும் உதவி

இறக்கும் வரை உறுத்துவது எது?

நம்பிக்கை துரோகம்

உலகத்தை வெல்பவன் யார்?

உண்மையும் பொறுமையும் உள்ளவன்

செவிடன் யார்?

நல்லதை கேட்காதவன்

நண்பன் யார் பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

ஆதிசங்கரர் அருளிய ‘பிரஸ்னோத்தர ரத்னமாலிகா’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளதுதான் இந்த 16 கேள்வி பதில்களும்.

முறையாக வாழ நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய, அனுபவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஞான புதையல்.

0 comments:

Post a Comment

 
TOP