Loading...
Wednesday, 7 August 2013

எத்தனுக்கு எத்தி-சிறுகதை

வேண்டாம் அருண் ....விடுங்க ப்ளீஸ்....
நாம பழகி சில நாட்கள் தானே ஆகுது..கல்யாணத்துக்கு முன்ன இதெல்லாம் வேண்டாம் அருண்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!!!

ஹேய்!  நம்ம  காதலப்பத்தி வீட்ல சொல்லிட்டேன்.அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க..அப்ரம் ஏன் கவலைப்புடுற?
கண்டிப்பா உன்ன நான் கல்யாணம் பன்னிப்பேன் இது சத்தியம் என்றான் அருண்..!!

மீண்டும்  சிணுங்கினாள் மோனிகா....

இன்பம் முடிந்தது
பொழுதும்  விடிந்தது.

சில நாட்களுக்கு பிறகு..
அருணின் அலுவலகத்துக்குள் புகுந்தாள் மோனிகா..
”என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துது அருண்.. நான் அப்டியா பழகினேன்?இப்டி பண்ணிட்டியே”  நீ நல்லாவே இருக்க மாட்டடா...பாவி.
கண்ணீர் வடித்தாள் கூச்சளிட்டாள்...

ஹேய் நிறுத்து !  1000 ரூபாய் கட்டொன்றை எடுத்து மோனிகாவின் முகத்தில் வீசினான் அருண்.
அதை மகிழ்வுடன் எடுத்தாள் மோனிகா.

"தேங்க்யூ வெரிமச் அருண்.ஆக்சுவல்லி என்னோட ரேட் பத்தாயிரம்தான். நல்ல பொண்ணுங்ககிட்ட நடிச்சி ஏமாத்துறது எப்டி உன்னோட வேலையோ...அதே போல உன்ன மாதிரி இருக்குற பணக்கார பசங்கள   ஏமாத்துறது  எனக்கு கைவந்த கலை"

குட் பை அருண்.


மனசுக்குள் புழுங்கினான் அருண் எய்ட்ஸ் பயத்தோடு..!!!


0 comments:

Post a Comment

 
TOP