Loading...
Tuesday 25 June 2013

நண்பன் (குட்டிக்கதை)

ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது. அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.


 “சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் . அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

 பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான். அரைமணி நேரத்தில் பணம் வந்தது. பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான். “நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா.. நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா” என்றான். இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.

இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..நண்பர்கள் கார்ட்டூன் 

0 comments:

Post a Comment

 
TOP